Royal Challengers and Rajasthan Royals Up for Sale: Rajasthan Royals Rejects ₹16,000 Crore Offer-விற்பனைக்கு வரும் ராயல்சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ.16000 கோடியை நிராகரித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

Spread the love

ஐ.பி.எல் அணிகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நிதி நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்க முன்வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சி.பி.சி.பி என்ற நிறுவனம் 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்க சுமார் ₹16,000 கோடி கோடி தருவதாக தெரிவித்தது. ஆனால் அந்த தொகையை அணி நிர்வாகம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுவும் ரூ.16 ஆயிரம் கோடியை வெறும் இரண்டு வாரங்களுக்குள் செலுத்துவதாக அவர்கள் உறுதியளித்திருந்தனர். ஆனால் அணியின் மதிப்பீட்டு தொகையை இன்னும் அதிகப்படுத்த நிர்வாகம் விரும்புவதாகவும், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதும் அணியை விற்பனை செய்ய முடியாமல் போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த மெகா தொகையை நிராகரித்திருப்பது, ஐபிஎல் அணிகளின் சந்தை மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, விற்பனைப் பேச்சுவார்த்தையில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மதிப்பு $2 பில்லியனைத்(ரூ.18,000 கோடி)தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பை விட 15 சதவீதம் அதிகமாகும். ஆர்.சி.பி. அணியின் பலமான பிராண்ட் மதிப்பு, மிகப்பெரிய ரசிகர் கூட்டம் மற்றும் வர்த்தக ரீதியான ஈர்ப்பு ஆகியவற்றை கொண்டிருப்பதால் அதன் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

தற்போது ஆர்.சி.பி அணியின் உரிமையாளராக இருக்கும் டயஜியோ நிறுவனம் வரும் மார்ச் மாதத்திற்குள் அணியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐ.பி.எல் பட்டத்தை வென்று இருப்பதன் மூலம் ஆர்.சி.பி அணியின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. மணிப்பால் மருத்துவமனையின் டாக்டர் ரஞ்சய் பை தலைமையிலான குழு, அமெரிக்காவின் கே.கே.ஆர். மற்றும் சிங்கப்பூரின் டெமஸ்கே ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆர்.சி.பி பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்க ஆதித்ய பிர்லா குழுமம் மற்றுல் ஆர்செலர் மிட்டல் போன்ற முன்னணி நிறுவனங்களும் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *