“RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்”- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்| “Sanju Samson was the face of the RR team,” says Faf du Plessis.

Spread the love

“நான் ஐ.பி.எல் தொடரையும், அணிகளையும் கவனித்திருக்கிறேன். அந்த லீக்கில் உள்ள அனைத்து பிரபலமான அணிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது.

அது என்னவென்றால் ஒவ்வொரு அணிக்கும் ஒரு வீரர் அடையாளமாக இருப்பார். அவர் நீண்ட காலமாக அந்த அணியின் முகமாகத் திகழ்வார்.

உதாரணமாக ரோஹித் சர்மா, எம்.எஸ். தோனி, விராட் கோலி ஆகியோரைக் கூறலாம்.

ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முகமாக சஞ்சு சாம்சன் இருந்தார். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் பற்றி நினைக்கும் போதெல்லாம், சஞ்சு சாம்சனின் முகம் தான் ஞாபகத்திற்கு வரும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த முகத்தை இழந்திருப்பது அணிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும். ஏன்னென்றால் சஞ்சு சாம்சன் முக்கிய அந்த அணிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *