RR vs CSK: “எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். முதல் போட்டி என்பதால்.!”- ருதுராஜ் கெய்க்வாட்| “Our team has a lot of young players. Since it’s the first match…!” said Ruturaj Gaikwad

Spread the love

கிரிக்கெட்டில் சில நாட்களில் ஆடுகளம் இதுபோன்று பேட்டிங்கிற்குச் சாதகமில்லாமல் இருப்பது இயல்புதான், ஆடுகளம் சாதகமாக அமையும் போது, வீரர்கள் நிச்சயம் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

அதனால் இந்தத் தோல்வியைக் கண்டு நான் விரக்தியடையவில்லை. இப்போதைய “இம்பாக்ட் பிளேயர்’ விதிகளால் எது சரியான இலக்கு என்று கணிக்க முடிவதில்லை. எங்களுடைய முயற்சி பலிக்கவில்லை என்றாலும், வரும் போட்டிகளில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட்

எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். முதல் போட்டி என்பதால் அவர்கள் சற்று பதற்றத்துடன் விளையாடி இருக்கலாம். ஆனால், முதல் போட்டியிலேயே பல தவறுகளைச் செய்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது ஒரு வகையில் நல்லதுதான்.

இந்தத் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம். இன்னும் மூன்று நாட்களில் அடுத்த ஆட்டம் இருப்பதால், வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையுடன் தயாராவதை உறுதி செய்வோம். இனிவரும் போட்டிகளில் எங்களின் ஆட்டம் நிச்சயம் இன்னும் சிறப்பாக இருக்கும்,” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *