S.I.R : ‘இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி! தமிழகத்தின் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்? |Tamil Nadu Final Electoral Roll 2026 Released: Electoral officer Announces Voter Deletions Under SIR

Spread the love

தமிழகத்திலேயே அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5,36,991 வாக்காளர்களும், தமிழகத்திலேயே மிகக்குறைவாக துறைமுகம் தொகுதியில் 1,16,986 வாக்காளர்களும் இருக்கின்றனர்.

வெளியான பட்டியலின்படி,

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621 ;  பெண்கள் 2,74,254 ;  மூன்றாம் பாலினத்தவர் 116).

இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662 ;  பெண்கள் 2,19,035;  மூன்றாம் பாலினத்தவர் 75).

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது.  இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,16,896 ஆவர். (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; மூன்றாம் பாலினத்தவர் 55).

இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட எழும்பூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879 ஆவர் (ஆண்கள் 65,677 ; பெண்கள் 69,149 ; மூன்றாம் பாலினத்தவர் 53).

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *