நடிகை சமந்தாவிற்கு இயக்குநர் ராஜ் நிதிமொரு என்பவருடன் நேற்று திருமணம் நடந்து முடிந்தது. சமந்தாவின் திருமண ஆடையில் உள்ள சிறப்பசம்ங்களை விளக்குகிறார் சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் பல்லவி.
நடிகை சமந்தாவிற்கும், “ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருக்கும் நேற்று கோவையில் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தா தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார்.
சமந்தா அணியும் ஆடைகளில் எப்போதும் தனித்துவம் இருக்கும். அதே போல் அவரின் திருமண ஆடையிலும் நிறைய நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதாக சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சமந்தாவின் திருமணப் புகைப்படத்தில் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். அதில் கோல்டன் நிறத்தில் எம்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதற்கு மேட்சிங்காக கோல்டன் சோக்கர் மற்றும் அணிகலன்கள் அணிந்திருந்தார்.
சமந்தாவின் திருமண ஆடையை அவரின் 15 வருட தோழியும், செலிபிரெட்டி ஸ்டைலிஸ்ட்டுமான பல்லவி சிங் ஸ்டைலிங் செய்திருக்கிறார். ஜெயதி போஸ் மற்றும் செலிபிரெட்டி காஸ்டியூம் டிசைனர் ஆர்பிதா மேத்தா ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர்.