அரசாங்கம் எது குறித்தும் ஆலோசிக்க மறுப்பதால் தான் நாடாளுமன்றம் இயங்குவதில்லை.
எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவது மிக எளிது. ஆனால், அவர்கள் எது குறித்தும் விவாதிக்க அனுமதிப்பதில்லை… அது ஜனநாயகம் இல்லை.
ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஆலோசனைகள் மிக முக்கியம். அனைவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கும். அவை அனைத்தையும் கேட்கவேண்டும்.
மோசடிகளை ரிப்போர்ட் செய்வதற்கும், இந்திய குடிமக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கும் இடையில் மெல்லிய கோடுதான் உள்ளது.
மோசடிகளை ரிப்போர்ட் செய்ய உரிய நடைமுறை வேண்டும் தான். சைபர் பாதுகாப்பு குறித்து நிறைய ஆலோசித்திருக்கிறோம்.
ஆனால், அது குடிமக்களின் மொபைல் போன்களுக்குள் செல்லும் சாக்குப்போக்காக இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.

ஜோதிராதித்யா சிந்தியா பதில் என்ன?
இந்த ஆப் குறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளதாவது…
“நுகர்வோருக்கு உதவுவதும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதும் எங்களது கடமை. சஞ்சார் சாத்தி ஆப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
இதுவரை சஞ்சார் சாத்தி ஆப் மூலம்…
> 1.75 மோசடி மொபைல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
> கிட்டத்தட்ட 20 லட்சம் தொலைந்த மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
> 7.5 லட்சம் திருடப்பட்ட மொபைல்கள் உரிமையாளர்களுக்குத் திரும்ப வழங்கப்பட்டுள்ளன.