Sarvam Maya: 'மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்' ; வாழ்த்திய சூர்யா,ஜோதிகா – நெகிழ்ச்சியில் ரியா

Spread the love

‘சர்வம் மாயா’ படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா – ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘சர்வம் மாயா’. அகில் சத்யன் இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார்.

அண்மையில் வெளியான இந்த மலையாளத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

'சர்வம் மாயா'
‘சர்வம் மாயா’

குறிப்பாக இந்தப் படத்தில் ரியா ஷிபு நடித்த ‘Delulu’ கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் ‘சர்வம் மாயா’ படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு பொக்கேவுடன் சூர்யா – ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்தியையும் அனுப்பி இருக்கின்றனர்.

இதுதொடர்பாக ரியா ஷிபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “நிஜமாவே நான் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். என் நடிப்பைப் பாராட்டி, இவ்வளவு அன்போடு இந்தப் பரிசை அனுப்பி வைத்ததற்கு சூர்யா சாருக்கும் ஜோதிகா மேமிற்கும் நன்றிகள்.

ரியா ஷிபுவை வாழ்த்திய சூர்யா, ஜோதிகா
ரியா ஷிபுவை வாழ்த்திய சூர்யா, ஜோதிகா

நீங்கள் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியும் நேரமும் மிகப்பெரிய விஷயம். ‘சர்வம் மாயா’ குழுவினர் அனைவரின் சார்பாகவும் இதனை நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *