sasikala : பழைய கட்சியை தூசு தட்டும் சசிகலா – sasikala plan for 2026 election, targeting admk, bjp, and ttv

Spread the love

அதிமுக, அமமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார். தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பில்லை. தேர்தல் நெருங்கி விட்டதால் அதற்கான அவகாசமும் இல்லை என்பதால் தனது தம்பியால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிடர் கழகத்தை தூசு தட்டி அதன் மூலம் தேர்தலை சந்திப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

கூட்டத்தில் கூட்டணி குறித்து பேச்சுக்கள் எழ ஆதரவாளர்கள் பலரும் பாஜக கூட்டணிக்குள் சென்று விடக்கூடாது என்கிற கருத்தை முன் வைக்க, `நீங்கள் விரும்புகிற கூட்டணி அமையும்’ என்றாராம். தவெக தலைவர் விஜய் தரப்புடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக தெரிகிறது.

இது அமைந்தால் 20 தொகுதிகளில் போட்டியிடுவார்கள், ஒரு வேளை அமையவில்லை என்றாலும் தனித்து நிற்கவும் தயாராகத்தான் இருக்கிறார். தேர்தல் செலவுக்கான பசையும் தடையின்றி கைக்கு வந்து சேரும்னு ஆதரவாளர்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.

அதிமுக-வில் வேட்பாளராக களம் இறங்க இருப்பவர்களின் ப்ளஸ் மைனஸ் குறித்த விபரங்களை திரட்டி ஃபைல் ஒன்றை கையில் வைத்திருக்கிறாராம். அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்துவது தான் திட்டம். ஒண்ணா இருக்கணும்னு நினைக்காமல், தன்னோட தியாகத்தை மதிக்காமல் ஆணவத்தோடு இருப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டணும் என்கிற குறிக்கோளுடன் தங்களுக்கு சாதகமாக இருக்கும் தொகுதிகள் குறித்தும் கணக்கெடுத்துள்ளார்.

2 சதவீத வாக்குகளை குறி வைத்து களத்தில் இறங்கியிருக்கிறார். இந்த 2 சதவீத வாக்குகள் நம்மை யார்னு உணர்த்தும், தேர்தல் முடிவுக்கு பின்னர் நிச்சயம் வருத்தப்படுவார்கள் என்கிற சசிகலாவின் கணக்கு பலிக்குமா என்பது வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தெரிய வரும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *