SEBI பெயரில் STT மோசடி அலர்ட்: பணம் கொடுக்காதீர்கள்|Fake SEBI Notice? Don’t Pay STT, Says SEBI

Spread the love

“பணம் கேட்டால் கொடுக்காதீர்கள்’ என்று தங்களது பெயரில் நடக்கும் மோசடி குறித்து அலர்ட் செய்துள்ளது செபி.

நேற்று செபி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது…

“செபியின் லெட்டர்பேடைப் பயன்படுத்தி, நிதி சட்டம் 2004-ன் கீழ், நிலுவையில் உள்ள STT (Securities Transaction Tax)-ஐ கட்டுமாறு மோசடி பேர்வழிகள் நோட்டீஸ் அனுப்புவது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

அது செபியின் நோட்டீஸ் அல்ல. இந்திய ரிசர்வ் வங்கியுடன் இந்த மாதிரியான எந்த நடவடிக்கைகளிலும் செபி இணைந்து செயல்படவில்லை. STT வரி பங்குகள் வாங்கும் போதும், விற்கும் போதும் விதிக்கப்பட்டு, புரோக்கர்களால் வாங்கப்பட்டு விடுகிறது.

மேலும், செபி அதிகாரி என்று கூறியும், செபி மெயில் ஐடி போன்ற ஐடியில் இருந்து மெசேஜ் அனுப்புவதும் நடந்து வருகிறது.

இதனால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்து, இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க சில வழிகளையும் சொல்லியுள்ளது செபி…

1. செபியால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் செபி வலைதளத்தில் உள்ளது. இதை Sebi > Enforcement-ல் செக் செய்யவும்.

2. ஆன்லைன் உத்தரவுகள், செட்டில்மென்டுகள், மீட்பு கட்டணம் போன்றவை siportal.sebi.gov.in-ல் தான் செய்யப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *