மும்பை: இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை மீண்டும் புதிய சாதனை உச்சத்தை எட்டியது. ஐடி, வங்கி மற்றும் எஃப்எம்சிஜி துறை பங்குகளில் தொடர்ந்து நான்காவது நாளாக வெற்றி ஓட்டம் நிலவியதால் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 626.91 புள்ளிகள் உயர்ந்து 81,343.46 புள்ளிகளாகவும், நிஃப்டி 187.85 புள்ளிகள் உயர்ந்து 24,800.85 புள்ளிகளாகவும் காணப்பட்டது. அதே வேளையில் இன்றைய வர்த்தகத்தில் நேரத்தில் மும்பை பங்குச் சந்தை அதன் புதிய சாதனை உச்சமான 81,522.55 புள்ளிகளும், நிஃப்டி 24,837.75 புள்ளிகளாகவும் இருந்தது.
பலவீனமான உலகப் போக்கு மத்தியில், வர்த்தகத்தின் தொடக்க நேரத்தில் நிஃப்டி 24,550 புள்ளிகளுக்கு கீழே வர்த்தகமான நிலையில், சில மணி நேரங்களில் எஃப்எம்சிஜி, ஐடி மற்றும் வங்கி ஆகிய துறைகளில் வாடிக்கையாளர்கள் வெகுவாக வாங்கியதால் பெஞ்ச்மார்க் நிஃப்டி அதன் புதிய உச்சத்தை எட்டியது.
டிசிஎஸ், எல்டிஐ மைண்ட்ட்ரீ, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் உச்சத்திலும், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், கிராசிம், கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் வர்த்தகமானது.
வங்கி, ஆட்டோமொபைல், ஐடி, எஃப்எம்சிஜி மற்றும் டெலிகாம் ஆகியவை 0.3 முதல் 2 சதவிகிதம் ஏற்றத்திலும், மூலதன பொருட்கள் துறையான உலோகம், மின்சாரம், ஊடகம் ஆகியற்றில் 1 முதல் 3.5 சதவிகிதம் சரிந்து. அதே வேளையில், பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் தலா ஒரு சதவிகிதம் சரிந்தது வர்த்தகமானது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் தீவிர ஏற்ற இறக்கம் தென்பட்ட நிலையில், மத்திய நேர வர்த்தகத்திலிருந்து எஃப்எம்சிஜி மற்றும் டெக் நிறுவன பங்குகளில் அதிகம் வர்த்தகமானதால், சென்செக்ஸ் 187.85 புள்ளிகளுடன் 24,800.85 என்ற புதிய சாதனை மட்டத்தில் முடிவடைந்தது. துறை சார்ந்த பங்குகளில் மீடியா 3% க்கும் அதிகமான இழப்புடன் முடிவடைந்தது.
ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் ஆகிய பங்குச் சந்தைகள் சரிந்தும், ஹாங்காங் பங்குச் சந்தை உயர்ந்தும் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (புதன்கிழமையன்று) பெரும்பாலும் சரிந்து முடிவடைந்தது.
உலகளாவிய எண்ணெய் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.45 சதவிகிதம் உயர்ந்து 85.45 அமெரிக்க டாலராக உள்ளது.