கதை ரெடி, ஷூட்டிங் போகலாமா?
பிக்பாஸ் சீசன் 9 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு எழுபது நாட்களைத் தாண்டி விளையாடி வருகிறார் கமருதீன்.
சக போட்டியாளர்களுடன் சண்டை, வாக்குவாதம் என நிகழ்ச்சிக்கு கன்டென்ட் தருபவராக இருக்கும் இவருக்கென ஒரு டீம் வெளியில் இயங்குவதாகச் சொல்கிறார்கள்.
எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தாலும் ஒவ்வொரு வாரமும் தப்பித்து வருவதன் ரகசியம் இதுதான் என்கிறார்கள் அவர்கள்.
தற்போது சிலர் இவருக்காகவே சில கதைகளை எடுத்துக்கொண்டு திரைப்படத் தயாரிப்பாளர்களை அணுகி வருகிறார்களாம்.

‘பிக்பாஸ்ல எப்படியும் டைட்டில் அடிப்பார். ஒருவேளை டைட்டில் இல்லாட்டி டாப் ஐந்து போட்டியாளர்கள்ல ஒருத்தரா நிச்சயம் வருவார். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததுமே ஷூட்டிங் போயிடலாம். எல்லாம் ரெடி’ என்கிற அவர்கள் இதுவரை நான்கைந்து தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லிவிட்டார்களாம்.
சில சீரியல்கள்லதான் அதுவும் சப்போர்ட்டிங் கேரக்டர்கள்லதான் நடிச்சிருக்கார். ஆனாலும் ஹீரோ என்றால் லக்கி மேன் தான் என்கிறார்கள் இன்னும் சிலர்.