Serial Update: டபுள் ஹீரோவா? நோ சொன்ன நடிகர் டு சமையல் நிகழ்ச்சி கூப்பன்; கறார் காட்டும் சி.இ.ஓ!

Spread the love

கறார் காட்டும் சி.இ.ஓ.!

டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களுக்கு பரிசுகள், கிஃபட் கூப்பன்கள் வழங்கப்படுவது வழக்கமாக நடப்பதுதான். அந்த மாதிரிதான் சமீபத்தில் முடிவடைந்த பிரபலமான‌ சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டனவாம். கூப்பன் என்றால் ஆயிரம் இரண்டயிரம் மதிப்பு மிக்கதல்ல. அந்தக் கூப்பன் இருந்தால் சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பிரபலமான அந்த நட்சத்திர ஓட்டலில் இரண்டு நாள் இலவசமாகத் தங்கலாம் உணவுக்கு கட்டணம் கிடையாது. ஓட்டலில் உள்ள இதர வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரூபாய் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மதிப்பு மிக்க கூப்பன் என்கிறார்கள். கூடுதலாக ஒருவரையும் கூட்டிச் செல்லலாம்.

இப்படிப் பட்ட கூப்பனை ஏனோ தெரியவில்லை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீரியல் ஹீரோயின் ஒருவரும் பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் பயன்படுத்த விரும்பவில்லையாம்.

இன்னொரு சக போட்டியாளர் ஒருவரிடம் கூப்பனை தந்து பயன்படுத்தச் சொல்லி விட்டார்களாம். அந்த சக போட்டியாளார் ஹோட்டலுக்குப் பேசி வரலாமா எனக் கேட்டிருக்கிறார். ‘எதுக்கும் நீங்க சி.இ.ஒ வை ஒரு வார்த்தை கேட்டுடுங்க’ எனச் சொல்லியிருக்கிறார்கள்.

‘இல்ல, இதை அனுமதிக்க முடியாது, யாருக்கு கொடுத்தாங்களோ அவங்கதான் வரணும்’ எனக் கறாராகச் சொல்லி விட்டாராம் சி.இ.ஒ.

‘கூப்பன் கையில இருக்கு, வேலிடிட்டி தேதியும் இருக்கு. ஆனாலும் பயன்படுத்த முடியாதுனு சொல்றாங்க. சி.இ.ஒ. நினைச்சா அனுமதிக்கலாம், ஆனா ஏன் மறுக்கிறார் தெரியலை’ என நொந்து கொண்டாராம் அந்த போட்டியாளர்.

இதில் ஹைலைட் என்ன தெரியுமா, ‘கூப்பனை அவங்கவங்கதான் கொண்டு வரணும்’ என கறார் உத்தரவு போட்ட ஹோட்டலின் அந்த சி.இ ஒ மேற்படி நிகழ்ச்சியில் நடுவராக வந்தவரேதான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *