Serial Update: டைட்டில் மாறி, வெளிவரும் ரியாலிட்டி ஷோ டு மீண்டும் சீரியலுக்கு திரும்பிய ஹீமா பிந்து!

Spread the love

ஜீ தமிழ் சேனலில் ‘மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடிஸ்’ என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானதே நினைவிருக்கிறதா? ஐந்தாறு ஆண்டுகளுக்கு்முன் அடுத்தடுத்து ஒளிபரப்பான இரண்டே இரண்டு சீசன்களுக்குப் பிறகு நிகழ்ச்சியைக் காணவில்லை.

இத்தனைக்கும் ரியாலிட்டி ஷோ ஏரியாவில் சேனலுக்கு நல்ல ரேட்டிங் வாங்கிக் கொடுத்தது நிகழ்ச்சி இது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது ‘அதே டெய்லர் அதே வாடகை’ என்பது போல மீண்டும் அந்த நிகழ்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது தலைப்பை மட்டும் ‘கில்லாடி ஜோடிஸ்’ என மாற்றி இருக்கிறார்கள்.

‘அந்த ஷோ ஆரம்பிச்சப்ப நிஜ கணவன் மனைவிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம்னு சொன்னாங்க. ரச்சிதா – தினேஷ், படவா கோபி அவருடைய மனைவி, கணவருடன் ஆனந்தி, ‘மைனா’ நந்தினி அவருடைய கணவர் கார்த்திக்னு பலர் கலந்துகிட்டாங்க. தண்ணீருக்குள் சாகஸம், மலையேற்றம்னு நிறைய த்ரில்லிங் இருந்ததால நிகழ்ச்சி நல்ல பேசப்பட்டுச்சு. ரேட்டிங்கும் கிடைச்சதா சொன்னாங்க.

மைனா நந்தினி கணவர் யோகேஷுடன்

இந்தமுறை ரியல் ஜோடிகளுக்குப் பஞ்சமா தெரியலை, ‘மிஸ்டர் அன்ட் மிசஸ்’ங்கிற அந்த டைட்டிலையே மாத்திட்டாங்க.

அல்லது ஒருவேளை சமீபத்துல ட்ரெட்ன்ட் ஆன கூமாப்பட்டி தங்கப்ப்பாண்டி, சாந்தினி ஜோடியை நிகழ்சிக்குள் கொண்டு வர டைட்டிலை மாத்தினாங்களா தெரியல.

இந்த ஜோடி தவிர இன்னும் சில ஜோடிகளுடன் முன்பு இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘மைனா’ நந்தினியும் தன் கணவர் யோகேஷுடன் கலந்து கொண்டுள்ளார். அடுத்த வாரத்திலிருந்து ஒளிபரப்பாகவிருக்கிறது நிகழ்ச்சி.

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘இதயத்தைத் திருடாதே’ சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் ஹீமா பிந்து. பிறகு அங்கிருந்து சன் டிவிக்கு வந்து ‘இலக்கியா’ தொடரில் நடித்தார். அதில் நடித்துக் கொண்டிருந்த போதே திடீரென தொடரிலிருந்து வெளியேறினார். சினிமா வாய்ப்பு வந்ததாகக் கூறினார்கள். நடிகர் ராகவா லாரன்ஸின் படத்தில் நடித்து வருவதாகச் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சன் டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார். ‘இரு மலர்கள்’ எனப் பெயரிடப் பட்டிருக்கும் பகல் நேர சீரியலில் நடிக்கிறார். இந்த சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவிருக்கிறது.

ஹீமா பிந்து

‘சினிமா பக்கம் போனவுடன் இனி சீரியல் பண்ணுகிற ஐடியா இல்லை எனச் சொன்னதாக வெளியான தகவல் குறித்து கேட்டால், ‘நான் அப்படி எதுவும் சொல்லலயே, தவிர, நான் பண்ணுகிற சீரியலும் பண்ணுகிற படமும் ஒரே தயாரிப்பு நிறுவனமா இருந்தா கால்ஷீட் சிக்கல் ஏதும் இருக்காதில்லையா, அதனால கமிட் ஆகிட்டேன்’ எனச் சமாளிக்கிறாராம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *