Serial update: ‘மேன்சன் குத்து’ பாடலில் முதலில் ஆட மறுத்த ஆனந்தி! டிவி ஏரியாவில் டிவிகே கொடி! | Serial update: TVK flag flying in TV area; Anandi was the first to refuse to dance in the song ‘Manson Kuthu’

Spread the love

தொகுதிக்குள் நல்ல வரவேற்பு இருக்கு. போற இடமெல்லாம் இளைஞர்கள், பெண்கள், வயதானவங்க கூட ஆதரவா பேசுறாங்க, பார்க்கலாம்” என்கிறார் இவர்.

நல்ல வேளை, முதல்ல மாட்டேன்னு சொன்னேன்!

‘கருப்பு’ படத்தில் தான் நடித்த சீன் எடிட்டிங்கில் போய் விட்டதாக சில தினங்களுக்கு முன்புதான் நம்மிடம் ஆதங்கப்பட்டிருந்தார் நடிகை ஆனந்தி.

வருத்தப்பட்டுப் புலம்பிய நேரமோ என்னவோ, ’29’ படத்தின் ‘மேன்சன் குத்து’ பாடலில் தோன்றி செமயாக ரீச் ஆகி விட்டார்.

‘இந்தக் குத்துப் பாட்டுல ஆடியிருக்கிறதா சொன்னதே இல்லையே’ எனக் கேட்டோம்,

‘நான்தான் சொல்லியிருக்கேன்ல, முன்னாடியே சொன்னா அந்தக் காட்சிகள் எடிட்டிங்கில் போயிடுதுன்னு. இந்தப் பாட்டுக்கு முதல்ல கூப்பிட்டப்பக் கூட நான் பண்ணலன்னு ‘நோ’ சொல்லிட்டேன். ஏன்னா, முழுப்பாட்டுலயும் வருவேனான்னு கேட்டதுக்கு, ‘இல்ல, பாட்டின் கடைசி அரை நிமிஷம் வருவீங்க’ன்னு சொன்னாங்க.

எவ்வளவு நேரம் வருவேன்னு உண்மையை அப்படியே சொன்ன டைரக்ஷன் டீமுடைய நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது. தவிர, எடுக்கறதே முப்பது செகன்ட்ங்கிறப்ப அதுல எங்க எடிட் பண்ணப் போறாங்கனும் நினைச்சுதான் பிறகு ஓகே சொன்னேன்.

ஆனா சாங் ரிலீஸ் ஆனதுல இருந்து இப்ப மூணு நாளா ரெஸ்ட் இல்லாம போன் வந்துட்டே இருக்கு.

அந்தளவுக்கு ரெஜிட்ஸ்டர் ஆகியிருக்கு முகம்.

எனக்கே நம்ப முடியலை. முழுப் பாட்டுக்கும் ஆடியிருந்தா கூட இந்தளவு ரீச் கிடைச்சிருக்குமா தெரியல’ என்றவர், இனிமே தமிழ் சினிமாவுல குத்துப்பாட்டுக்கு ஆடறதுக்கு என்னைக் கூப்பிட்டுடுவாங்களோனு தோணுது. எதுவும் நம்ம கையில இல்லை. நான் மறுத்ததும் வேற ஆர்ட்டிஸ்ட்டைத் தேடி யூனிட் போயிருந்தா எனக்கு இந்தப் பப்ளிசிட்டி கிடைச்சிருக்காது தானே” என்கிறார் இவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *