சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகளால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து போலீசார் அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் பிரபல ரவுடி துரைசாமி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவுடி
திருச்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி துரை சாமி, இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் துரைசாமி புதுக்கோடை மாவட்டம் திருவரங்குளம் வம்பன் காட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று ரவுடி துரைசாமியை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். திடீரென அவர் போலீஸ்காரர்களை கத்தியால் வெட்ட முயன்றதாக தெரிகிறது.
என்கவுண்டரில் சுட்டுக்கொலை
இதைத்தொடர்ந்து தப்பியோட முயன்ற ரவுடி துரைசாமி,இன்ஸ்பெக்டர் முத்தையா துப்பாக்கியால் சுட்டார். இதில் துரைசாமியின் கால் மற்றும் மார்பில் குண்டு பாய்ந்ததில் பரிதாபமாக ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.
ரவுடி துரைசாமி வெட்டியதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. என்கவுண்டரல் சுட்டுக்கொல்லப்பட்ட துரைசாமியன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும் காவல் கண்காணிப்பாளர் வந்திதா சம்பவ இடத்தை ஆய்வு செய்து நடந்த விபரங்களை கேட்டறிந்தார்.
சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரைசாமி மீது 4 கொலை வழக்குகள் மற்றும் ஏராளமான திருட்டு வழக்குகள் என 74 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முன்பு கடந்த ஆண்டு இவரை போலீசார் சுட்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
வெங்கட் பிரபுவின் நண்பன் ஒருவன் வந்த பிறகு: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு