இந்தியாவில் “நுகர்வோருக்கு நேரடி விற்பனை’ (Direct-to-Consumer – D2C) முறை மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ சாதனங்கள் சந்தையில் பாரம்பரிய விநியோக முறைகளைத் தாண்டி, பிராண்டுகள் நேரடியாக வாடிக்கையாளர்களைச் சென்றடைகின்றன.
சந்தை நிலவரம் & வாய்ப்புகள் (Market Size & Opportunities):
இந்தியாவின் D2C (Direct-to-Consumer) சந்தை 2085-ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் (சுமார் ₹9 லட்சம் கோடி) மதிப்பை எட்டும் என்று Inc42 மற்றும் WhalesBook வெளியிட்ட ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்
இதில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ சாதனங்களின் பங்கு மிக முக்கியமானது.
* இணையப் பயன்பாட்டின் அதிகரிப்பு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை வளர்ச்சி மற்றும் Tier-2, Tier-3 நகரங்களில் இருந்து வரும் அதிகப்படியான தேவை ஆகியவை இத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.
* வாடிக்கையாளர்கள் இன்று வெறும் தயாரிப்பை மட்டும் வாங்குவதில்லை; அவர்கள் ‘தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை’ (Personalized Experience) விரும்புகிறார்கள். அதே சமயம் இடைத்தரகர்கள் இல்லாததால், நிறுவனங்களால் குறைவான விலையில் தரமான பொருட்களை வழங்க முடிகிறது என்பது கூடுதல் அம்சம்.
தற்போதைய சந்தை நிலவரப்படி, இந்தியாவின் ஆடியோ சாதனங்கள் (TWS – True Wireless Stereo) சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் நிறுவனங்கள்:
1.boAt , 2. Noise, 3. Boult Audio 4. Realme & 5.OnePlus போன்ற நிறுவனங்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் ‘Mass Market’ எனப்படும் வெகுஜன சந்தை மற்றும் விலை குறைப்பு யுத்தத்தில் (Price War) கவனம் செலுத்துகின்றன.
பெரிய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஒரு தனித்துவமான அடையாளத்துடன் உருவான D2C பிராண்ட் தான் ‘Sieben’. பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் வெறும் தொழில்நுட்ப அம்சங்கள் (Specs) மற்றும் விலையை மட்டுமே முன்னிறுத்தும் வேளையில், “வாடிக்கையாளரின் ஆளுமையே (Personality) பிராண்டின் அடையாளம்” என்ற புதிய சித்தாந்தத்துடன் Sieben சந்தையில் நுழைந்துள்ளது. இந்த வாரம் ஸ்டார்அப் சாகசத்தில் Sieben நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் அவர்களின் சாகசக்கதையை கேட்போம்…..