சென்னை:
நடிகர் ஜெயம்ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்து வாழப்போவதாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
பிரிந்தனர்
அதில், “ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
ஆர்த்தி அறிக்கை
இதைத்தொடர்ந்து ஆர்த்தியும், ஜெயம் ரவியும் மாறி மாறி தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிநடைபெறும் பொதுக் கருத்துகளில் எனது மௌனம் பலவீனம், குற்ற உணர்வின் அடையாளம் அல்ல.நான் கண்ணியமாக இருக்கவும், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும் முடிவு செய்து உள்ளேன்.ஆனால் நீதி வழங்கும் சட்டத்தை நம்புகிறேன்.
தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் முந்தைய அறிக்கை பரஸ்பர ஒப்புதலின் மூலம் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அறிவிப்பைக் குறிக்கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனிப்பட்ட உரையாடல்
எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. இன்றுவரை மறுக்கப்பட்ட இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் இன்னும் எதிர்பார்க்கிறேன்.நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன், யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் வகையில் பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்ல வாழ்க்கையில் உள்ளது. இதகற்கான வழியை கடவுள் ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.