இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கிக் கணக்கில் உள்ள `ரிவார்டு’ பாயிண்ட்டுகளை பணமாக மாற்ற `SBI reward.apk’, ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அபராதம் செலுத்த `RTO challan.apk’, வங்கிக் கணக்கின் கே.ஒய்.சி (KYC) புதுப்பிக்க `KYC/Aadhar update.apk’ போன்ற ஏ.பி.கே ஃபைல்களை அனுப்பி, பணம் அபகரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் பி.எல்.ஓ-க்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.

இக்காலக்கட்டத்தில், சைபர் கிரைம் குற்றவாளிகள் வாட்ஸ் அப்பில், `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர் பெயர் மற்றும் வாக்காளரின் நிலை போன்ற விவரங்களை அறிந்துகொள்ள’ என்ற தலைப்பில், `SIR Election Commission.apk’ என்கிற ஏ.பி.கே ஃபைலை அனுப்பி வருகின்றனர்.
இப்படி வரும் ஏ.பி.கே ஃபைலின் லிங்க்கை இன்ஸ்டாலேஷன் அல்லது கிளிக் செய்வதன் மூலமாக தங்களுடைய போன் `ஹேக்’ செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் முழுவதுமாக எடுக்கப்படுகிறது. ஆகையால், வாட்ஸ் அப் குரூப்பில் வரும் எந்தவொரு லிங்க் மற்றும் ஏ.பி.கே ஃபைல்களை கிளிக் செய்ய வேண்டாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.