SIR: “பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம்”/Sellur raju press meet at madurai

Spread the love

பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு SIR ஆப் செயல்படுத்த தெரியவில்லை. சிலருக்கு நெட் வசதி இல்லை, பலருக்கு ஆப் பயன்படுத்தும் வகையில மொபைல்போன்கள் இல்லை. கட்சி முகவர்கள்தான் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இறந்து போனவர்களையும், இரண்டு வாக்கு உள்ளவர்களையும் நீக்க வேண்டும் என்பதுதான் வாக்காளர் திருத்தப் பட்டியலின் நோக்கம். கணக்கெடுக்கும் பணி இப்படி நடந்தால் அந்த நோக்கமே நிறைவேறாது.

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறி வருகிறார்.

போலி வாக்காளர்களை வைத்து திமுக வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது, SIR கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்திவருகிறது, தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *