SIR: விருதுநகர் நகர்மன்றக் கூட்டம்: `கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி சரியாக நடைபெறவில்லை’ – எழுந்த குற்றச்சாட்டு

Spread the love

விருதுநகர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:

கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர் ராஜ்குமார் தனது வார்டில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனை தீர்க்கப்படவில்லை. எனவே, அதை சரிசெய்ய வேண்டுமென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார். நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தோண்டி போடப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமென உறுப்பினர் வெங்கேடஷ் தெரிவித்தார். மேலும் அருப்புக்கோட்டை சாலையின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தில் சீரமைப்பதாகத் தெரிவித்தும், ஏன்? சரி செய்யவில்லையென உறுப்பினர்கள் ஜெயக்குமார், மிக்கேல்ராஜ் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *