Sivakarthikeyan: நடராஜன் பயோபிக் மட்டுமா? 25வது படத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் லைன் அப்!

Vikatan2f2024 072f3f57c55f 0228 4d5e 9997 B45b848a40932f 5454.jpg
Spread the love

சினிமாவில் 25-வது படத்தை நெருங்குகிறார் சிவகார்த்திகேயன். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் படங்கள் நடித்து வருகிறார். அடுத்து அவர் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்கிறார், சுதா கொங்கராவின் படத்தில் கமிட் ஆகிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன.

அமரன்

கமலின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவா. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. இந்தப் படத்தில் சிவாவின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், ‘விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் நடித்துள்ளனர். மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. சில மாதங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்துப் படத்தின் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியாகக் காத்திருக்கிறது.

அமரன்

‘அமரன்’ ஷூட்டிங்கின் போதே, சிவகார்த்திகேயனின் 23வது படமாக ஏ.ஆர்.முருகதாஸ் படம் அமைந்தது. கன்னடத்தில் ரசிகர்களைப் பெற்ற ருக்மிணி வசந்த் இதில் நாயகியாக நடிக்கிறார். வித்யுத் ஜம்வால், பிஜூ மேனன், விக்ராந்த், ஷபீர், சஞ்சய், சஞ்சனா நமிதாஸ் எனப் பலரும் நடித்து வருகின்றனர். சென்னை, பாண்டிச்சேரி உட்படப் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் ஒரே சமயத்தில் இந்தியிலும் படம் இயக்கி வருகிறார். சல்மான் கானை வைத்து அவர் இயக்கும் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பும் ஆரம்பித்துவிட்டதால், மும்பையில் அதன் ஷூட்டிங்கும் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து வருகிறது. இப்போது சின்னதொரு பிரேக்கில் இருக்கும் ‘எஸ்.கே.23’வின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெறும் என்கிறார்கள்.

‘அமரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் பட டைட்டில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. தென்மாவட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியில் சல்மான்கான் படத்திற்குச் செல்கிறார் முருகதாஸ். செப்டம்பர் முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடையும் என்கிறார்கள். இதனை அடுத்து வெங்கட் பிரபு, ‘குட் நைட்’ விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் ஒரு படம் என அருமையான லைன் அப்கள் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

ஏ.ஆர்.முருகதாஸ்

வெங்கட் பிரபு இப்போது விஜய்யின் ‘தி கோட்’ படத்தை இயக்கி வருகிறார். அதனையடுத்து சிவாவுக்கான கதையை ஏற்கெனவே அவர் உருவாக்கி வைத்துள்ளார் என்பதால் அக்டோபரில் சிவாவுடன் பயணத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் ‘டான்’ சிபி சக்கரவர்த்தியும் கதை ரெடி செய்து வருகிறார். அவரும் மும்முரமாக ஸ்க்ரிப்ட்டைச் செதுக்கி வருகிறார். ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக்கும் சிவாவிடம் அருமையான லைன் ஒன்றைச் சொல்லி அசத்தியுள்ளார். தவிர சுதா கொங்கராவும் சிவாவுக்கு ஒரு லைன் சொல்லியிருக்கிறார். அது ‘புறநானூறு’ படத்தின் கதை அல்ல என்றும் சொல்கிறார்கள். இவை தவிர கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக் கதையும் சிவாவின் லைன் அப்பில் இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *