Sivakarthikeyan: “நெல்சன் அண்ணன்கிட்ட நான் ‘வேட்டை மன்னன்’ல உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்!” – சிவகார்த்திகேயன் |”I worked as an assistant director in ‘Vettai Mannan’ with Nelson!” – Sivakarthikeyan

Spread the love

“பலூன்’ படத்தின் இயக்குநர் சினீஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற ‘பார்கிங்’ படத்தைத் தயாரித்திருந்தார்.

அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது.

அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படம், மற்றொன்று ‘ஃபைனலி’ பாரத் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படம்.

இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ” ‘சூப்பர் ஹீரோ’ படத்திற்காக அர்ஜூன் தாஸுக்கு வாழ்த்துகள். ‘நிஞ்சா’ டீமுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இந்தக் கதையின் ஐடியா எனக்குத் தெரியும். ரொம்பவே சுவாரஸ்யமானது அது.

நெல்சன் அண்ணன்கிட்ட நான் ‘வேட்டை மன்னன்’ படத்துல உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அப்போ எங்களுக்கு ஆபீஸ் எதுவும் கிடையாது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள்னு யாரும் அப்போ உறுதியாகல.

அப்போ, நாங்க மெரினா பீச்ல உட்கார்ந்துதான் கதை பேசுவோம். நெல்சன் அண்ணன் சொல்ற விஷயங்களை நான் எழுதுவேன்.

ஆபீஸ் போட்டதுக்குப் பிறகு அருண் ராஜா வந்து சேர்ந்தாரு. அதன் பிறகு சினிஷ் (பலூன் பட இயக்குநர் & பார்க்கிங் பட தயாரிப்பாளர்) வந்தாரு. அவர் நெல்சன் அண்ணனுடைய ஃப்ரெண்ட்னு எனக்குத் தெரியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *