SL vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு அடி மேல அடி… முதல் சுற்றோடு வெளியேறுகிறதா? / Is aus eliminating in first league round itslef

Spread the love

நிசாங்கா சதம்… இலங்கை கொண்டாட்டம்

182 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, 2-வது ஓவரிலேயே பெரேரா 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்பட்டது.

ஆனால் அதன் பிறகு களத்தில் நிலைத்த Kusal Mendis மற்றும் Pathum Nissanka ஜோடி, தேவையான நேரங்களில் ரன்களைத் தேடி தேடி அடித்து ஆட்டத்தை இலங்கை பக்கம் திருப்பியது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

105 ரன்கள் இருந்த நிலையில், 13-வது ஓவரில் மெண்டிஸ் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு முழுக் கவனமும் நிசாங்காவின் பேட்டிங்கில்தான்.

இந்த வருட T20 தொடரின் முதல் சதத்தை பதிவு செய்த நிசாங்கா, 100 (52 பந்துகள்) என அதிரடியாக விளையாடினார்.

இதன் மூலம் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,

ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றி,

சூப்பர் 8 சுற்றில் தங்களுக்கான இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளது.

இந்தப் போட்டியில் அதிரடி காட்டிய நிசாங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் கணக்கு என்ன?

இனி ஆஸ்திரேலியா சூப்பர் 8-க்கு தகுதி பெற வேண்டுமெனில்,

ஜிம்பாப்வே அணியின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ள ஜிம்பாப்வே, 4 புள்ளிகளுடன் உள்ளது.

மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலே,

குரூப் B-யில் இரண்டாவது அணியாக ஜிம்பாப்வே தகுதி பெறும் சூழல் உருவாகியுள்ளது.

ஜாம்பவான் அணியாக, வலுவான அணியான ஆஸ்திரேலியா முதல் சுற்றுடன் வெளியேறுவதற்கான சூழலே தற்பொழுது நிலவுகிறது என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *