SL vs ZIM: “தோல்வியே இல்லாமல் சூப்பர் 8-க்கு வந்தது பெருமையாக இருக்கிறது”- சிக்கந்தர் ராசா | Zimbabwe Sikandar Raza sl vs zim post match speech

Spread the love

டி20 உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணி வெற்றி பெற்றிருக்கிறது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜிம்பாப்பே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, “நாங்கள் எதிர்காலத்தை நோக்கி கவனத்தைச் செலுத்துகிறோம். கடந்த இரண்டு வாரங்களில் எங்கள் வீரர்கள் காட்டிய முயற்சி மிகப்பெரியது.

 ஜிம்பாப்பே அணி

ஜிம்பாப்பே அணி

எங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். நாங்கள் இந்த இடத்திற்கு வருவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மக்களின் மனதை வென்றதும், அவர்களின் மரியாதையைச் சம்பாதித்ததும்தான் எங்களின் பெரிய வெற்றி.

நாம் நல்ல கிரிக்கெட் விளையாடுகிறோம் என்றால் டாஸ் எவ்வளவு முக்கியம் என்று வீரர்களிடம் நான் சொல்லியிருக்கிறேன். நேற்றைய ஆட்டத்தில் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தாலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

பேட்டிங் ஆர்டரை நிலைமைக்கு ஏற்ப மாற்றினோம். ஒவ்வொரு முடிவும் திட்டமிட்டதே. இதுவரை தோல்வியே இல்லாமல் சூப்பர் 8-க்கு வந்தது பெருமையாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *