Soap அல்லது Syndet bar… சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்? | Soap or Syndet bar… which is better for the skin and why?

Spread the love

சோப் என்பது பெரும்பாலும் அல்கலைன் (Alkaline) தன்மையில் தயாரிக்கப்படும்  டிடர்ஜென்ட் சார்ந்த பொருள். இதன் பி.ஹெச் (pH) அளவு பொதுவாக 8 முதல் 9 வரை இருக்கும். சில சோப்புகளில் 9-க்கு அதிகமாகவும் இருக்கும். சோப்பில் வாசனைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் செயற்கை நறுமணங்கள், அதிக ஸ்ட்ராங்கான சந்தன எண்ணெய் மற்றும் கெமிக்கல்கள்   சேர்க்கப்படுகின்றன.

இவையெல்லாம் சேர்க்கப்பட்ட சோப்பை பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள “ஆசிட் மேன்ட்டில்’ (Acid mantle) எனும் மெல்லிய கொழுப்புப் படலம் நீக்கப்படுகிறது. இதில் சீபம், நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்டைடுகள் (ஆன்டி மைக்ரோபியல் பெப்டைடு) மற்றும் ஈரப்பதமூட்டும் காரணிகள் (மாய்ஸ்ச்சரைசிங் ) உள்ளன. சோப் உபயோகிக்கும்போது இவையும் சேர்ந்து நீக்கப்படும்.

சிண்டெட் பார் பயன்படுத்தும்போது சருமத்தின் பாதுகாப்பு படலம் தக்க வைக்கப்படுகிறது.

சிண்டெட் பார் பயன்படுத்தும்போது சருமத்தின் பாதுகாப்பு படலம் தக்க வைக்கப்படுகிறது.

சோப்பில் உள்ள அதிக பிஹெச் அளவு காரணமாக, இது சருமத்தில் எரிச்சலை (Irritation) உண்டாக்க வாய்ப்புள்ளது. நார்மலான சருமம் கொண்டவர்களுக்கு சோப் உபயோகிப்பதால் சருமம் வறட்சியடையலாம். ஏற்கெனவே வறண்ட சருமம் (Dry skin) உள்ளவர்கள் சோப்பைத் தொடர்ந்து பயன்படுத்தினால், சரும வறட்சி மேலும் தீவிரமாகி, அரிப்பு ஏற்பட்டு சருமத்தின் பாதுகாப்புத் தன்மை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

சிண்டெட் பார் (Syndet bar) என்பது வேதியியல் ரீதியாகத் தயாரிக்கப்படுகிற சுத்திகரிப்புப் பொருள்.  நமது சருமத்தின் பிஹெச் அளவானது  4.5 முதல் 5.5 வரை இருக்கும். இந்த பிஹெச் அளவுக்கேற்றபடி, சிண்டெட் பார் ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறது. இதில் அதிகப்படியான நறுமணங்களோ அல்லது தேவையற்ற எண்ணெய்களோ சேர்க்கப்படுவதில்லை. சிண்டெட் பார் பயன்படுத்தும்போது சருமத்தின் பாதுகாப்பு படலம் தக்க வைக்கப்படுகிறது.  குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சோப்பைவிட சிண்டெட் பாரே சிறந்தது. இது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் எரிச்சலைத் தவிர்க்கவும் பெரிதும் உதவுகிறது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *