Sony Vizha: சீரியல் ரசிகர்களுக்கு குட்நியூஸ்; உதயமாகும் ‘சோனி விழா’ புதிய சேனல்; அடுத்த ப்ளான் என்ன? | sony launches new tamil channel sony vizha soon

Spread the love

சீரியல் மற்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு இனிப்பான ஒரு செய்தி இது. சன், விஜய், ஜீ தமிழுக்குப் போட்டியாக இன்னொரு புதிய சேனல் விரைவில் உதயமாகவிருக்கிறது

ஆம், பிரபல சோனி குழுமம் தமிழுக்கு வரவிருக்கிறது.

சின்னத்திரை ஏரியாவில் கடந்த சில தினங்களாக இது குறித்த பேச்சுகள் உலா வர, விபரம் அறிந்த சிலரிடம் பேசினோம்.

“பொழுதுபோக்குத் துறையில் சர்வதேச அளவுல சோனி ரொம்பவே பிரபலம். ‘கன்டென்ட் கிங்’னு கூடச் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்னால் தமிழின் ஜீ தமிழ் சேனலை சோனி குழுமம் வாங்கப் போறதா பேச்சு அடிபட்டது நினைவிருக்கலாம்.

அதுக்கான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் கூட நிகழ்ந்ததாகச் சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததோ தெரியலை, கடைசியில அந்த முயற்சி நடக்கலை.

இந்தப் பின்னணியிலதான் வட இந்தியாவுல ஏற்கனவே இருக்கிற சோனி குழுமம் தென்னிந்தியாவுல கால் பதிக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கு.

அதுவும் தமிழ்ல இருந்தே தொடங்குறாங்க. முதல் கட்ட வேலைகள் கூட தொடங்கிட்டதாகவே தெரியுது. தற்சமயம் சேனலுக்கு ‘சோனி விழா’ எனப் பெயர் சூட்டியிருக்கறதா சொல்றாங்க.

ஜி.இ.சி எனப்படும் பொழுதுபோக்கை முதன்மையாகக் கொண்ட சேனல்தான் முதல் படி. சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பாகவிருக்கின்றன. இதன் மூலம் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் என ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து செய்திச் சேனல்கள் உள்ளிட்ட பிற ஏரியாவிலும் தடம் பதிக்கும் ஐடியாவும் சோனிக்கு இருக்கிறதாம்” என்கிறார்கள் இவர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *