StartUp சாகசம் 48 : `மறுமணத்திற்கென தனி மேட்ரிமோனி தளம்.!’ – SecondSutra நிறுவனரின் சாகச கதை | Success story of Second Sutra a matrimony startup

Spread the love

“தற்போதைக்கு நாங்கள் வெளி முதலீடுகள் எதையும் திரட்டவில்லை. ஏற்கனவே எங்களுக்கு வெற்றிகரமாக இயங்கும் மற்றொரு நிறுவனம் உள்ளது. அதன் லாபத்தைக் கொண்டே, சமூக நோக்கம் கொண்ட இந்தத் திட்டத்தை (SecondSutra.com) “Bootstrapped” முறையில் நடத்தி வருகிறோம்.

எதிர்காலத்தில் முதலீட்டாளர்களை அணுகினால், பின்வரும் இரண்டு விஷயங்களே எங்களின் பலமாக இருக்கும்:

1.  வலுவான குழு : நிறுவனத்தை வழிநடத்தும் குழுவின் அனுபவம்.

2.  தனித்துவமான தயாரிப்பு : மிகப்பெரிய சந்தை (Market Size) என்றாலும், அதில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஆழமாக இறங்கி, பிரத்தியேகத் தீர்வைத் தருவது.

“செகண்ட் சூத்ரா (Second Sutra)  பங்குதாரர்களில் ஒருவர் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர். ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் பங்குதாரராக இருக்கும்போது, சட்ட ரீதியிலான நடைமுறைகள் (Legal Documentation) மிக அதிகம். எங்கள் ஆடிட்டரின் அறிவுரைப்படி, ஆரம்பகட்டச் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவே சிங்கப்பூரில் பதிவு செய்தோம். அடுத்தகட்ட வளர்ச்சியின்போது இந்தியாவிலும் பதிவை மேற்கொள்வோம்.”

வழக்கமான முறையை விட, இந்தத் தொழில்நுட்ப அணுகுமுறைகள் பயனர்களின் நம்பிக்கையை வெல்ல பெரிதும் உதவின.

1.  விர்ச்சுவல் மீட் (Virtual Meet):

    * இரண்டாம் திருமணத்தைத் தேடுபவர்கள், கடந்தகாலக் கசப்பான அனுபவங்களால் தங்கள் பர்சனல் நம்பரை உடனே பகிரத் தயங்குவார்கள்.

    * எங்கள் தளத்திலுள்ள ‘விர்ச்சுவல் மீட்’ மூலம், போன் நம்பரைப் பகிராமலே வீடியோ காலில் பேசலாம். ஒருவேளை பிடிக்கவில்லை என்றால், அத்துடன் முடித்துக்கொள்ளலாம். இது அவர்களுக்குப் பாதுகாப்பையும் நிம்மதியையும் தருகிறது.

2.  மூன்று அடுக்குச் சரிபார்ப்பு :

    * அரசு ஆவணம் : நபர் உண்மையானவரா என அறிய.

    * வீடியோ சரிபார்ப்பு : புகைப்படத்தில் இருப்பவர்தான் இப்போதும் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய.

    * தொழில்முறைச் சரிபார்ப்பு : LinkedIn அல்லது அலுவலக மின்னஞ்சல் மூலம் அவர்களின் வேலை/பதவியை உறுதி செய்ய.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *