“காப்புரிமைப் பாதுகாப்பு என்பது தயாரிப்பு வளர்ச்சி மற்றும் தயாரிப்பு வணிகமயமாக்கலின் ஒரு பகுதி. எங்கள் பார்வையில், இந்தியாவில் காப்புரிமை என்பதைப் பற்றி பலருக்கும் புரியவில்லை. அதே சமயம் அதைப் புதிய நிறுவனங்களில் குறைந்த விருப்பத் தேர்வாக இருக்கிறது.
மறுபுறம் பல தொழில்முனைவோர் இந்த அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு/வர்த்தக ரகசியங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் ஆனால் வாடிக்கையாளர்களுக்கான சரியான தயாரிப்புகளை உருவாக்குவதை மறந்து விடுகிறார்கள். அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு என்பது சரியான தயாரிப்பு/சிறந்த நிறுவனத்தை உருவாக்குவதன் மதிப்பில் சுமார் 20% மட்டுமே.
இந்தியாவில், ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் மூலம் காப்புரிமைப் பதிவு மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகளைப் பதிவு செய்ய பல திட்டங்கள் மற்றும் மானியங்களைக் கொண்டு வந்துள்ளது. எனது பார்வையில், தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க ஒன்றை உருவாக்குவதில் அதிகபட்ச முயற்சி மற்றும் ஆற்றலைச் செலுத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அதே சமயம் சிறந்த ஒன்று என்று தெரிந்தபின் உடனடியாக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இப்போது நாங்கள் 6 காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்து, அதில் ஒன்று இந்தியாவிலும், ஒன்று அமெரிக்காவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.”
“இந்தியாவில் அதிகமான விவசாயிகள் தக்காளி வீணாவது குறித்துக் கவலை அடைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நாங்கள் எங்கள் தயாரிப்புகள் தான் அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு எனகூறியபோது யாரும் வாங்கவில்லை. இங்கே பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் தீர்வுகளுக்குத் யாரும் தயார் இல்லை, ஏனெனில் பொருளாதாரம் இங்கே ஒரு சிக்கலான விஷயம்.
எனவே எங்களது வாடிக்கையாளர்களாக விவசாயிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் என யார் 50 டன்களுக்கும் மேல் பொருட்களைக் கையாள்பவர்களே அவர்களே எங்கள் வாடிக்கையாளர்கள் என்று தீர்மானித்துக்கொண்டோம். அதோடு பல ஆண்டுகளாகப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றும் இவர்களிடம், எங்களது ‘சாச்செட்’ (Sachet) அல்லது ‘ஸ்ப்ரே’ வடிவிலுள்ள பொருட்களை அறிமுகப்படுத்துவதில் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் இருந்தது.
நாங்கள் முன்பே இந்த பிரச்னையை உணர்ந்ததால் எங்கள் வணிகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டோம்:
1. சந்தை ஆராய்ச்சி
2. விற்பனை.
சந்தை ஆராய்ச்சியின் போது, வாடிக்கையாளர் பிரச்சனைகள்/அவர்களின் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ளச் சந்தையில் நேரத்தைச் செலவிடுகிறோம்.
வாடிக்கையாளர்களின் தயாரிப்பை எங்களது தயாரிப்புகள் வணிகமயமாக்க உதவுகிறது. சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதன் மூலமும் புத்துணர்ச்சியைத் தக்கவைப்பதன் மூலமும், எங்களது தயாரிப்பு முதன்மையாகப் புத்துணர்ச்சியைத் தக்கவைத்து இழப்புகளைக் குறைக்கிறது. இதனால் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பொருளாதார மதிப்பை அதிகரிக்கிறது. அதனால் வாடிக்கையாளர்களால் எங்கள் GreenPod Labs தயாரிப்புகளுடன் 3 முதல் 4X ROI பெற முடிகிறது.”