டெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை மாற்றி அமைக்கப்பட்டதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை வழக்குப் பதிவு செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர் மணிஷ் சிசோடியா, தெலுங்கானா முன்னாள் முதல் அமைச்சரும், பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா உள்ளிட்டோரை கைது செய்தது. இந்த வழக்கில் மணிஷ் சிசோடியாவுக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் விடுதலையானார்.
மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்க: பா.ஜ., வலியுறுத்தல்
கண்கலங்கிய கவிதா
இதன் தொடர்ச்சியாக மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கவிதாவுக்கும் இன்று(27ந்தேதி) உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து 5 மாதங்கள் 12 நாட்களுக்கு பிறகு டெல்லி திகார் ஜெயிலில் இருந்து கவிதா இன்று வெளியே வந்தார்.
அவருக்கு பி.ஆர்.எஸ்.கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது கவிதா தொண்டர்கள் மத்தியில் பேசும்போது கண்கலங்கினார். அவர் கூறும்போது, “உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு இன்று என் மகன், தம்பி, கணவரைச் சந்தித்து உணர்ச்சிவசப்பட்டேன்.
இந்த நிலைக்கு அரசியல்தான் காரணம்
எனது இந்த நிலைக்கு அரசியல்தான் காரணம். அரசியலால்தான் நான் சிறையில் அடைக்கப்பட்டேன் என்பது நாட்டுக்கே தெரியும். எந்த தவறும் செய்யாத நான் தொடர்ந்து எதிர்த்து போராடுவேன்.நாங்கள் போராளிகள், சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவோம். அவர்களால் பி.ஆர்.எஸ். மற்றும் கே.சி.ஆர். அணியை உடைக்கமுடிவில்லை என்றார்.