புதுடெல்லி:
முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் (2006&–2011) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோர் தங்களின் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த காலகட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ரூ.44.56 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக 2012&ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. அதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி ரூ.76.40 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012&ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது.
தாமாக முன்வந்து
லஞ்ச ஒழிப்புத் துறை அளித்த மேல் விசாரணை அறிக்கை அடிப்படையில் 2022ஆம் ஆண்டில் தங்கம் தென்னரசுவை விடுவித்தும், 2023ஆம் ஆண்டில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை விடுவித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அளித்த இந்த இரு உத்தரவுகளுக்கும் எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்தாண்டு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அளித்த இரு உத்தரவுகளை ரத்து செய்து, வழக்குகளை மறுவிசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செப். 9ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.
பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் சாதனை
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. இதில் தங்கம் தென்னரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், தங்கம் தென்னரசு மனைவி தரப்பில் அபிஷேக் மனு சிங்வி, மூத்த வழக்கறிஞர் முரளிதரன் உள்ளிட்டோர் ஆஜராகினார். எதிர்தரப்பாக தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பிசி ராமன் ஆஜரானார்.
இடைக்கால தடை
இதை தொடர்ந்து, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்குகளை மறுவிசாரணை செய்ய ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த ஸ்ரீனிவாசன் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(6ந்தேதி) உத்தரவு பிறப்பித்தது. மேலும் தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களில் இதுகுறித்து பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.