Surya 47: சூர்யாவுடன் இணைந்த ஆவேசம் இயக்குநர்; முக்கிய ரோலில் நஸ்ரின், நஸ்லன் | Aavesham director joins forces with Suriya; Nasrin, Naslen in lead roles

Spread the love

சூர்யாவின் 45-வது படமாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் `கருப்பு” படம் அடுத்தாண்டு வெளியாகவிருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா தனது 46-வது படமாக, கடந்த ஆண்டு பிற்பாதியில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த தெலுங்கு படமான `லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், ஹீரோயினாக மமிதா பைஜு நடிக்கிறார்.

Surya 46 - வெங்கி அட்லூரி, மமிதா பைஜு, ஜி.வி.பிரகாஷ்

Surya 46 – வெங்கி அட்லூரி, மமிதா பைஜு, ஜி.வி.பிரகாஷ்

இந்த நிலையில், கடந்த ஆண்டு மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்ற `ஆவேசம்’ பட இயக்குநர் ஜித்து மாதவனுடன் சூர்யா இணைந்திருக்கிறார்.

சூர்யாவின் 47-வது படமான இதில் நஸ்ரியா, நஸ்லன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆவேசம் படத்துக்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

ழகரம் ஸ்டுடியோஸ் (Zhagaram Studios) தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்வில், இயக்குநர் ஜித்து மாதவன், சூர்யா, ஜோதிகா, நஸ்ரியா, நஸ்லன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பட பூஜை க்ளிக்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *