Surya Kant: உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதி; இவரின் பதவி காலம் தெரியுமா? | Surya Kant: New Supreme Court judge; Do you know his tenure?

Spread the love

நீதிபதி சூர்ய காந்த்:

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய 370-வது பிரிவு ரத்து வழக்கு, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் வழக்கு, பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு போன்ற இந்தியாவின் மிக முக்கியமான வழக்குகளில் நீதிபதி காந்த் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் வழக்கை விசாரிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்த நீதிபதிகள் அமர்விலும் இவர் இருந்தார்.

சூர்ய காந்த் (Surya Kant)

சூர்ய காந்த் (Surya Kant)

கடந்து வந்தப் பாதை:

நீதிபதி காந்த் பிப்ரவரி 10, 1962 அன்று ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். 2011-ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தில் “முதல் வகுப்பு’ இடத்தைப் பிடித்தார். அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பிப்ரவரி 9, 2027 வரை, அதாவது அவரின் 65 வயது வரை சுமார் 15 மாதங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர்வார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *