T20: “என்​னால் பேட்​டிங் செய்ய முடிய​வில்​லை. நான் முடங்கிபோய் இருந்தேன்”- சஞ்சு சாம்சன் | T20: “Icouldn’t bat. I was completely stuck.” – Sanju Samson.

Spread the love

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் ரன்களைக் குவித்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், “ஒன்​றரை ஆண்​டுகளுக்கு முன்பே வெஸ்ட் இண்டிஸில் நடந்த உலகக்​கோப்பையில் விளை​யாடிக்​கொண்டிருந்தபோதே, இது போன்ற ஒன்றைச் செய்ய வேண்​டும் என்று நான் சிந்​தித்​து, கற்​பனை செய்​து, பயிற்​சி​யும் எடுத்து வந்​தேன்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

ஆனால், நியூஸிலாந்து தொடருக்​குப் பிறகு என் கனவு​கள் அனைத்​தும் சிதைந்து​ விட்​ட​தாகவே நினைத்தேன்.

நியூஸிலாந்து தொடருக்​குப் பிறகு நான் உடைந்து போயிருந்​தேன். நான்கு முதல் ஐந்து நாட்​களுக்கு என்​னால் என் படுக்​கையை விட்டு நகரக்​கூட முடியவில்​லை. என்​னால் பேட்​டிங் செய்ய முடிய​வில்​லை.

நான் முடங்கிபோய் இருந்தேன். நான் மகிழ்ச்​சி​யாக இல்​லை. எனக்​குக் கிடைத்த வாய்ப்​பு​களை நான் சரி​யாகப் பயன்​படுத்​த​வில்லை என்ற உண்மையை ஏற்​றுக்​கொண்​டேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *