ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் வீராங்கனை தோல்வி

Dinamani2f2024 07 312fawhc38rv2fpnnsytr48vsgvyhtqf7v.avif.jpeg
Spread the love

 

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா 16 ஆவது பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் ஜப்பானின் மியு ஹிரானோவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

சௌத் பாரீஸ் அரங்கில் 47 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் எட்டாம் நிலை வீரரான ஹிரானோ 11-6, 11-9, 12-14, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் வரலாற்றில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய டேபிள் டென்னிஸ் ஒற்றையர் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மணிகா பத்ரா.

மணிகாவை வென்ற ஹிரானோ 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு யூத் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

29 வயதான மணிகா பத்ரா, முந்தைய சுற்றுகளில், பிரான்ஸின் பிரித்திகா பவடே மற்றும் கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சி ஆகியோரை வீழ்த்தினார். 2020 இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 32 வது கட்டத்தில் மணிகா பத்ரா வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *