Tamannaah: "பெண் நடிகர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைப்பது அரிது!" – தமன்னா ஓபன் டாக்

Spread the love

சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் நடிகை தமன்னா. கடந்த 2005-ம் வெளிவந்த ‘சந்த் ஷா ரோஷன் செஹ்ரா (Chand Sa Roshan Chehra) என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் தமன்னா.

தமன்னா
தமன்னா

இந்தியில் அறிமுகமாகியிருந்தாலும், தென்னிந்திய சினிமாவில்தான் அவருக்கு அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தன.

சினிமாவில் 21 ஆண்டுகளைக் கடந்திருப்பது பற்றி டெல்லியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார் தமன்னா.

அவர், “என்னுடைய அனைத்து படங்களும் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

நான் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் புதிதாகத் தொடங்குவது போலவே உணர்கிறேன்.

குறிப்பாகப் பெண் நடிகர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைப்பது அரிது.” என்றவர் தொடக்கத்தில் தென்னிந்திய சினிமாவில் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்து, பிறகு மற்ற சினிமாக்களிலும் பிரபலமானது பற்றி,”பார்வையாளர்கள் தொடர்ந்து எனக்கு அன்பைத் தருகிறார்கள்.

தமன்னா
தமன்னா

அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். தென்னிந்திய சினிமாக்கள் மூலம் மக்கள் என்னை ஏற்கெனவே ஏற்றுக்கொண்டனர்.

அதே சமயம், இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து கிடைக்கும் இந்த அன்பு எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது. மக்கள் எனக்குத் தொடர்ந்து கொடுத்து வரும் அன்பை, நான் அவர்களுக்கு எவ்விதத்தில் திரும்பச் செலுத்தலாம் என்பதற்கான வழிகளையும் இடைவிடாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *