October 17, 20246:44 PM IST
Tamil Live Breaking News: ”அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்”
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆயுள் தண்டனை கைதி வீரபாரதி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு அளித்திருந்த நிலையில், முன்கூட்டியே விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுனர் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.