September 12, 20248:08 PM IST
Tamil Live Breaking News: மகாவிஷ்ணு சர்ச்சை – தலைமைச்செயலாளரிடம் அறிக்கை
பிற்போக்கு பேச்சாளர் மகாவிஷ்னு பேசிய விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வழங்கினார்.
விழா நடத்த ஏற்பாடு செய்தது யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை ஆசிரியை தமிழரசியிடமும், பள்ளியிலும் விசாரணை நடத்திய நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.