Tamil Live Breaking News: ஆளுநரா? ஆரியநரா? – முதல்வர் ஸ்டாலின் கேள்வி | Breaking and Live Updates

Spread the love

October 18, 20246:09 PM IST

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அக்டோபர் 20 ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் அக்டோபர் 22ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகா ஆகிய பகுதிகளில் ஓரளவுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்த வாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & ஏனாம், ராயலசீமா, தெலுங்கானா ஆகிய இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கேரளா & மாஹே 22 & 23 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு… விரிவாக வாசிக்க 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *