September 05, 20248:13 AM IST
Tamil Live Breaking News : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு நாளை பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் செல்லும். இந்த சிறப்பு ரயிலில் படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
தாம்பரத்தில் இருந்து கேரளாவின் கொச்சுவேலிக்கு செப்டம்பர் 6, 8, 13, 15, 20, மற்றும் 22ஆம் தேதிகளில் ஏ.சி. சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து செப்டம்பர் 7, 16, 14, 21, 23 ஆம் தேதிகளில் தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருச்சி, மதுரை, செங்கோட்டை வழியாக பயணிக்கும். இந்த ரயில்களில் 14 ஏசி எகனாமி வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்களுக்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.