February 04, 202512:00 PM IST
Tamil Live Breaking News: சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. யூடியூபர் திவ்யா ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் திவ்யா, கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 29 ஆம் தேதி புதன்கிழமை யூடியூபர் திவ்யா கள்ளச்சி கார்த்திக், ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் திவ்யா, கார்த்திக் ஆனந்த் ஆகிய மூவருக்கும் ஜாமீன் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல். செய்த நிலையில் இந்த மனு மீது விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.