August 23, 20247:26 PM IST
Tamil Live Breaking News : கிருஷ்ணகிரி விவகாரம் – எடப்பாடி பழனிச்சாமி சந்தேகம்
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன் தற்கொலை செய்து கொண்டது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றும், உண்மை குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிரிழந்ததும், அவரது தந்தை வகனந்த்தில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.