September 25, 20247:13 PM IST
Tamil Live Breaking News: திருப்பதி பிரமோற்சவம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருப்பதி திருமலையில் நடைபெற உள்ள பிரமோற்சவத்தை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்; www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.