October 13, 20247:13 AM IST
Tamil Live Breaking News: தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், மதுரை, திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, ஆகிய 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.