Tamil Live Breaking News : மம்தா பேனர்ஜியை எதிரிபோல நடத்துவதா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியின் மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இதையடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர், இது தான் கூட்டாட்சியா? ஒரு முதலமைச்சரை இப்படி தான் நடத்துவதா? எதிர்கட்சிகளும் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை எதிரிபோல நினைத்து அவர்களின் குரலை ஒடுக்க நினைக்கக்கூடாது. ஒரு கூட்டாட்சிக்கு அனைத்து தரப்புகளின் குரல்களுக்கும் மரியாதையளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Is this #CooperativeFederalism?
Is this the way to treat a Chief Minister?
The Union BJP government must understand that opposition parties are an integral part of our democracy and should not be treated as enemies to be silenced.
Cooperative Federalism requires dialogue and… https://t.co/Y6TKmLUElG
— M.K.Stalin (@mkstalin) July 27, 2024