Tamil Live Breaking News: “பாஜகவால் ஒருபோதும் ஒரே நாடு ஒரே தேர்தலை செயல்படுத்த முடியாது” – முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு! | Breaking and Live Updates

Spread the love

September 19, 20246:13 PM IST

Tamil Live Breaking News: “பாஜகவால் ஒருபோதும் ஒரே நாடு ஒரே தேர்தலை செயல்படுத்த முடியாது” – முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறான ஒரு முன்மொழிவாகும். இது இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட தேர்தல் முறையின் சிக்கல்களை புறக்கணிப்பதோடு, கூட்டாட்சி தத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறது.

பிராந்திய பிரச்சினைகள், நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றின் காரணமாக ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமில்லாதது.

இந்த நடவடிக்கை பாஜகவின் ஈகோவை திருப்திபடுத்தும் நடவடிக்கை. பாஜகவால் ஒரே நாடு ஒரே தேர்தலை ஒருபோதும் செயல்படுத்த முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப வளைக்க முடியாது.

எனவே, இதுபோன்ற திசை திருப்பும் நிகழ்வுகளில் சக்தியை வீணாக்காமல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் மாநிலங்களுக்கு வளங்களை சமமாக பகிர்ந்தளித்தல் போன்ற பிரச்சினைகளை மத்திய அரசு தீர்க்க வேண்டும்.” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *