September 27, 20247:10 PM IST
Tamil Live Breaking News: முதலமைச்சரை சந்திக்க செந்தில் பாலாஜி விமான நிலையம் வருகை
சிறையில் இருந்து பிணையில் நேற்று விடுதலையான பிறகு, முதலமைச்சரை சற்று நேரத்தில் விமான நிலையத்தில் சந்திக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, ராஜா கண்ணப்பன், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆவடி நாசர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வருகை.