Tamil Live Breaking News: ரூ.26.61 கோடி டெண்டர் முறைகேடு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு | Breaking and Live Updates

Spread the love

September 18, 20242:39 PM IST

Tamil Live Breaking News: ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் கொலை மிரட்டல்… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல் விடுத்தற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ” ‘தனது பாட்டிக்கு நேர்ந்த கதியை ராகுல் காந்தி சந்திக்க நேரிடும்’ என்று ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் ஒருவர் விடுத்துள்ள மிரட்டல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும் ராகுலின் நாக்கை வெட்டுவேன் என ஷிண்டே பிரிவு சிவசேனா எம்எல்ஏ விடுத்துள்ள மிரட்டலும் கண்டிக்கத்தக்கது.

எனது சகோதரர் ராகுல் காந்திக்கு, பெருகிவரும் மக்கள் ஆதரவு, இதுபோன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுக்கிறது. ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும். மேலும், மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *