Tamil Nadu SIR | தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதாக நயினார் நாகேந்திரன் கருத்து | Nainar Nagendran says Stalin is opposing Special Voters List of fear of defeat

1381236
Spread the love

காரைக்குடி: தோல்வி பயத்தால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முதல்வர் எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோல்வி பயத்தால் தமிழக முதல்வர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறார்.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நேரு காலத்திலிருந்தே நடைபெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

தமிழக அரசு அனைவரையும் மது குடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மது விற்பனைக்கு ரூ.600 கோடிக்கு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், அது ரூ.750 கோடியை தாண்டிவிட்டது. ஜூன் மாதத்தில் 6.30 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, செப்டம்பரில் அறுவடை செய்யப்படும் என்பது குறித்து முதல்வருக்கு முன்கூட்டியே தெரியும்.

தெரிந்திருந்தும் விவசாயிகளிடமிருந்து 60 சதவீத நெல் கொள்முதல் செய்யவில்லை. தற்போது 40 சதவீதம் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் திடீரென மழை வந்துவிட்டதாக வேளாண்மைத்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால் காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்ள ரூ.10 கோடிக்கு இயந்திரங்கள் வாங்குவதாக ஏற்கெனவே சட்டப்பேரவையில் நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். இதில் யார் கூறுவது பொய் என்பது தெரியவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *