2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஒளிபரப்பான சீரியல்களுக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் நடிகர்கள் ராஜேஷ், மாரிமுத்து, பாலா சிங், இயக்குநர்கள் எஸ். ராஜசேகரன், எஸ்.என்.சக்திவேல் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மறைந்து விட்ட நிலையில், இவர்களது குடும்பத்தினர் விருதுகளைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், அரசு வழங்கும் விருதுகளை உரிய காலகட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சின்னத்திரை நட்சத்திரங்கள் எழுப்புகின்றனர்.

“‘இப்ப 2014 ஆம் வருஷத்துல இருந்து 2022ஆம் ஆண்டு வரையிலான விருதுகள் அதாவது ஒன்பது வருஷ விருதுகளைச் சேர்த்துக் கொடுக்கிறாங்க.
23 ஆம் வருஷத்துல இருந்து 25 ஆம் வருஷம் வரைக்கான விருதை எப்ப தருவாங்க தெரியலை.
எங்க கோரிக்கை என்னன்னா, தனியார் விருதுகளாவது ஸ்பான்சர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுனு நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கிறதால் தாமதமான அதுல அர்த்தம் இருக்குனு ஏத்துக்கலாம்.
அரசு தர்ற விருதை அந்த வருஷத்துக்கான விருதை அடுத்த வருஷ தொடக்கத்துலயே கொடுத்திடுறதுல என்ன சிக்கல் இருக்கப் போகுது?