
”கிளெரிக்கல் எரர்னு சொல்வாங்க இல்லையா, அந்த மாதிரியான ஒரு சின்னத் தவறு காரணமாக இப்படி நிகழ்ந்துடுச்சு. விஜயலட்சுமி சீரியலுக்கு வசனம் எழுதறாங்க. ஆனா விருதுக்கு விண்ணப்பிக்கிற போது அவங்களுடைய பெயர் தவறுதலா திரைக்கதை ஆசிரியர்னு குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கு. அதிகாரிகளைப் பொறுத்தவரை விண்ணப்பத்திலிருக்கிற தகவல்களின் அடிப்படையில் பரிசீலனை செய்து அறிவிச்சதாச் சொன்னாங்க.
பட்டியல் வெளியானதும் தவறைச் சுட்டிக்காட்டினோம். முதல்ல ஏற்றுக் கொள்ள மறுத்தாங்க. ஆனா பிறகு உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிச்சதும் திருத்தி அரசாணை வெளியிடச் சம்மதிச்சாங்க.
அதனால இப்ப விஜயலட்சுமிக்குப் பதில் என்னுடைய பெயர் விருது பட்டியல்ல இடம் பெற்றிருக்கு. நிகழ்ந்த தவறைச் சுட்டிக்காட்டியதும் புரிஞ்சு சரி செய்த அதிகாரிகள் உள்ளிட்ட தமிழக அரசுக்கும், என் தயாரிப்பாளருக்கும், ‘இந்த விருது அவங்களுக்கு அறிவிக்கப்பட்டதுமே, அது அவருக்கான விருது’ என முதல் ஆளாகக் குரல் கொடுத்த விஜயலட்சுமிக்கும் சேர்த்தே என்னுடைய நன்றியை, இந்த தருணத்தில் தெரிவிச்சுக்க விரும்பறேன்” என்றார்.
சீரியல்களில் தான் ‘இவருக்குப் பதில் இவர்’ கார்டு வருமென நினைத்தால் சீரியல்களுக்கான விருதுகளிலுமா, என்னத்த சொல்ல?